பொது செய்தி

இந்தியா

மின் கம்பத்தில் சாய்ந்த மரக்கிளைகள் அகற்றம்

Added : ஜன 08, 2020
Advertisement

புதுச்சேரி:பள்ளியில் உள்ள மின் கம்பத்தில் சாய்ந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.முதலியார்பேட்டை தொகுதி உழந்தை கீரப்பாளையம் அய்யனார் கோவில் தெருவில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மின்சார கம்பத்தில் மரத்தின் கிளைகள் சாய்ந்தது. இதுகுறித்து, பாஸ்கர் எம்.எல்.ஏ., விடம் பெற்றோர்கள் தகவல் தெரிவித்தனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி, மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு வனத் துறையிடம் பாஸ்கர் எம்.எல்.ஏ., அனுமதி பெற்றார். பின், தனது சொந்த செலவில் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்ற ஏற்பாடு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X