பொது செய்தி

தமிழ்நாடு

மகரிஷி உறைவிட பள்ளியில் தேசய ஒருமைப்பாட்டு முகாம்

Added : ஜன 08, 2020
Advertisement
 மகரிஷி உறைவிட பள்ளியில்  தேசய ஒருமைப்பாட்டு  முகாம்

காஞ்சிபுரம்:சந்தவேலுார் மகரிஷி பன்னாட்டு உறைவிட பள்ளியில், சாரண - சாரணியர் இயக்கம் சார்பில், தேசிய ஒருமைப்பாடு முகாம் துவக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலுார் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், பாரத சாரண - சாரணியர் இயக்கம் சார்பில், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய ஒருமைப்பாடு முகாம், 5ம் தேதி துவங்கியது. இதில், இந்திய முழுவதிலும் இருந்து, 18 மாநிலங்களை சேர்ந்த, சாரண - சாரணியர் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாம் நாள் விழாவிற்கு, பாரத சாரண சாரணியர் இயக்க மாநில தலைவர் டாக்டர் பி.மணி தலைமை வகித்தார்.மாநில செயலர் பா.நரேஷ், காஞ்சிபுரம் சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி, தலைமைய ஆணையர் சண்முகவேல், மாநில அமைப்பு ஆணையர் அமல் ராஜ் நாராயணசாமி பங்கேற்றனர்.மாநில பயிற்சி ஆணையர் கே.கே.வெங்கட்ரமணன், முன்னாள் இணை ஆணையர் அலமேலு, தெற்கு மண்டல துணை ஆணையர் குமுத்மெக்கரா, பள்ளி முதல்வர் முனைவர் சாருமதி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

சாரணர் இயக்கத்தின் குறிக்கோள்களையும், சட்டத்திட்டங்களையும், குடிமை பயிற்சியை வளர்த்துக்கொள்ளும் முறைகளையும் எடுத்துரைத்தனர்.மாநில பண்பாடு மற்றும் கலாசாரங்களைப் போற்றும் வகையில், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நாளை, முகாம் நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X