பொது செய்தி

இந்தியா

ராமானுஜர் பஜனை மடத்தில் துவாதசி சாற்றுமுறை

Added : ஜன 08, 2020
Advertisement

புதுச்சேரி:ரங்க ராமானுஜர் பஜனை மடத்தில், துவாதசி சாற்றுமுறை நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் பழமையான, ரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, மார்கழி மாத மகோற்சவ திருவிழா, கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.மகோற்சவ திருவிழாவை முன்னிட்டு, மார்கழி மாதம் முழுவதும் காலை 5:00 மணிக்கு, ஆண்டாள் ரங்க ராமானுஜர் பஜனை மண்டலியினரின் பஜனை ஊர்வலமும், தொடர்ந்து காலை 6:00 மணிக்கு, திருப்பாவை உபன்யாசமும் நடந்து வருகிறது. கிருஷ்ணராஜ் ராமானுஜ தாசர் உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார்.மார்கழி மகோற்சவத்தில் முக்கிய உற்சவமாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பஜனை மடத்தில் நேற்று முன்தினம் காலை பரமபத வாசல் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 8:00 மணிக்கு ஆரம்பித்து, நேற்று காலை 8:00 மணி வரை, பக்தி இசைக் குழுவினர், பஜனை குழுவினர் பங்கேற்ற 12 மணி நேர அகண்ட நாம சங்கீர்த்தனம் நடந்தது.வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து, துவாதசி சாற்றுமுறை நேற்று காலை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்தி அனந்த ரங்கநாதருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, பஜனை மடத்தின் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன், தேவநாத ராமானுஜ தாசர், பாலாஜி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X