புகார் பெட்டி.,.,.| Dinamalar

புகார் பெட்டி.,.,.

Added : ஜன 08, 2020

மெகா பள்ளத்தால் அவதி
முத்தியால்பேட்டை வ.உ.சி., நகர் அன்னிபெசன்ட் வீதியில் இரு இடங்களில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.-ராமன், முத்தியால்பேட்டை.
பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்
முதலியார்பேட்டை ஆலைத் தெருவில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.-கிருஷ்ணமூர்த்தி, முதலியார்பேட்டை.
சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்
அரும்பார்த்தபுரம் பாலகிருஷ்ணன் நகரில் சாலை வசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாற வேண்டியுள்ளது.-பத்மநாபன், அரும்பார்த்தபுரம்.
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரில்சாலை வசதி, கால்வாய் வசதி இல்லை.-அனந்தசயனம், மேரி உழவர்கரை.
தெருவிளக்கு எரியவில்லை
கீழ்சாத்தமங்கலம் கல்லுாரி அருகே பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.-லட்சுமி, கீழ்சாத்தமங்கலம்.
அரும்பார்த்தபுரம் வசந்தம் நகர் கிருஷ்ணா வீதி- காவேரி வீதி சந்தப்பில் தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை.-முரளி, வசந்தம் நகர்.
புழுதி பறப்பதால் அவதி
புவன்கரே வீதியில் சாலை சீர்கேட்டால் புழுதி பறப்பதால், மக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.-வெங்கடேசன், புவன்கரே வீதி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X