கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

காரைக்கால்:கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், தக்களூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், அதேபகுதியை சேர்ந்த அபிராமி,33; என்பவரை இரண்டு ஆண்டிற்கு முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் பாஸ்கர், சரிவர வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் வீட்டில் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் அபிராமி, குடும்ப செலவிற்கு பணம் கேட்டார். அதில் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரை திட்டியுள்ளார். அதில் மனமுடைந்த அபிராமி, வீட்டின் பின்னால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அபிராமிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், தாசில்தார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X