சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: செங்கல்பட்டு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement

கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் சாலையில், மதுராந்தகம் போலீசார், நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஆள் இல்லாமல், வெகு நேரமாக நின்ற இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் குறித்து விசாரித்தனர்.அதில், வாகனத்தின் உரிமையாளர் மதுராந்தகம், சின்னக்காலனியைச் சேர்ந்த செங்குட்டுவன், 33, என்பதும், இவர், இப்பகுதியில் கஞ்சா விற்க இந்த வாகனத்தை பயன்படுத்தியதும் தெரிந்தது.இதையடுத்து, செங்குட்டுவனை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மது குடித்த வாலிபர் மரணம்

திருப்போரூர்: திருக்கழுக்குன்றம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24. மது போதைக்கு அடிமையான இவருக்கு, வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம், மது அருந்தி, முத்திகைநல்லான் குப்பம் வயலில் நடந்து சென்றார். அப்போது, கால் இடறி விழந்தபோது, வலிப்பு நோய் ஏற்பட்டு, மயங்கி கிடந்தார்.திருக்கழுக்குன்றம் போலீசார் வந்து பார்த்தபோது, ராஜேஷ் இறந்துவிட்டார். சடலத்தை மீட்டு, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X