வீடு புகுந்து பணம் திருடிய வாலிபர் கைது

Added : ஜன 08, 2020
Advertisement

புதுச்சேரி:வீடு புகுந்து பணம் திருடிய லிபியா நாட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, சந்தாசாகிப் வீதியை சேர்ந்தவர் முகமதுரியாஸ். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி பாத்திமா, தாய் மும்தாஜ்பேகம் ஆகியோர் மட்டும் இருந்தனர். மாலை நான்கரை மணியளவில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து மேஜையில் வைத்திருந்த பணம் மற்றும் கார் சாவியை எடுத்தார்.அதனைக் கண்ட ஆசிரியரின் தாய் சத்தம் போடவும், அந்த வாலிபர் பணம் மற்றும் கார் சாவியைதிருடிக் கொண்டுதப்பினார்.தகவலறிந்து வீட்டிற்கு வந்த முகமது ரியாஸ் தனது நண்பர்களுடன், திருட்டு ஆசாமியை தேடினார். அப்போது, அதேபகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே நின்றிருந்த அந்த வாலிபரை பிடித்து ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர், லிபியாவை சேர்ந்த அப்துல் ஒமரன்,27; என்பதும், தமிழக பகுதியில் தங்கி கல்லுாரியில் படித்து வருவதும், முகமது ரியாஸ் வீட்டில் ரூ.5,000 பணம் மற்றும் கார் சாவியை திருடியதை ஒப்புக் கொண்டார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.5,000 மற்றும் கார் சாவியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X