பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்

Added : ஜன 08, 2020
Advertisement

காஞ்சிபுரம்:'சாலையில் குப்பை கொட்டும் வணிக நிறுவனங்களுக்கு, 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில், இந்திரா சாலையில் உள்ள கடை வியாபாரிகள் வணிக நிறுவனங்கள், ஓட்டல், லாட்ஜ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.இதில் பங்கேற்று, ஆணையர் மகேஸ்வரி பேசியதாவது:தினமும் காலையில், அனைத்து தெருக்களிலும், துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதியில் குப்பையை சேகரித்து, குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

எனினும், காலை, 9:00 மணிக்கு மேல், சில கடைகள், வணிக நிறுவனங்கள், துப்புரவு செய்த இடத்தில், மீண்டும் குப்பையை போடுகின்றன. இதனால், அந்த இடத்தில் அசுத்தம் ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.இனி, சாலையில் குப்பையை கொட்டும் கடை, வணிக நிறுவனங்களுக்கு, 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து, நகராட்சி பணியாளர்களிடம் தர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இந்த கூட்டத்தில், நகர் நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X