பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி. வரி சலுகையை காங்., அரசு வழங்க மறுப்பு: பா.ஜ., மாநில தலைவர் குற்றச்சாட்டு

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:மத்திய அரசு வியாபாரிகளுக்கு அளிக்கும் ஜி.எஸ்.டி. வரி சலுகையை காங்., அரசு வழங்க மறுத்து, அனைவரும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறுவதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை:பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சிறு, குறு வணிகர்கள், தொழில் முனைவோர்களின் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் முறையில் ஆண்டுக்கு 40 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் பல கோடி வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.புதுச்சேரியில் சிறு, குறு வணிகர்கள், தொழில் முனைவோர்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டிற்கு 40 லட்சத்திற்கு குறைவாக வியாபாரம் செய்தாலும் ஜி.எஸ்.டி. கண்டிப்பாக செலுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு தெரிவித்துள்ளது.இதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி வணிகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாநிலங்களில் உள்ள நடைமுறையை போல ஆண்டிற்கு 40 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க வேண்டும்.காங்., அரசு, கேசினோ சூதாட்டம், மதுக்கடை, கள்ள லாட்டரி, ரியல் எஸ்டேட் மீது காட்டும் அக்கறையை, நேர்மையான முறையில் தொழில் முனைவோர் மீதும், வணிகர்கள் மீதும் காட்ட வேண்டும். கேபிள் டி.வி. கள்ள லாட்டரி தொழிலில் செய்வோரிடம் வரி வசூல் செய்யாமல் இருப்பதால், அரசுக்கு ஆண்டிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.எனவே, முதல்வர் நாராயணசாமி வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரி, மின் கட்டண உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் சிறு, குறு தொழிற்சாலைகள் அண்டைமாநிலங்களுக்கு சென்று விட்டது.எனவே, ஆண்டிற்கு 40 லட்சம் வரை வியாபாரம் செய்வோருக்கு, வரி விலக்கு அளிக்காவிடில் புதுச்சேரி அனைத்து வியாபாரிகள், தொழில் முனைவோரை திரட்டி பா.ஜ., போராட்டம் நடத்தும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
08-ஜன-202009:02:05 IST Report Abuse
Ramachandran Rajagopal மக்களிடம் வசூலிக்கும் வரியை எந்த வணிகராக இருந்தாலும் அரசுக்கு செலுத்தினால் தான் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.அதை விடுத்து வரியை வணிகர்கள் எடுத்துக்கொள்வதால் நாட்டில் ஊழல்கள் பெருகுவதோடு பொருளாதார மந்த நிலை நீடிக்கும்.ஒட்டு வங்கிக்காக எதையாவது செய்துகொண்டிருப்பதுதான் ஆளும் கட்சிகளின் வேலையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X