எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Share
எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, கூட்டம் அலைமோதுகிறது.

இந்த கடைக்கு, புளியந்தோப்பு, கண்ணிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மனைவி சசிகலா சென்றார். உடன், அவரது மகன் ரணிஷ் பாபுவை, 13, அழைத்துச் சென்றார்.மாலை, 6:00 மணிக்கு, ஏழாவது மாடியில் இருந்து, எட்டாவது மாடிக்கு, நகரும் படிக்கட்டு எனும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

அப்போது, எஸ்கலேட்டரில், கைப்பிடிக்காக அமைக்கப்பட்டுள்ள, 'ரப்பர் பெல்ட்'டில் தலை வைத்து, தரைதளத்தின் அழகை ரசித்தவாறு சிறுவன் சென்றுள்ளான்.எஸ்கலேட்டர், எட்டாவது மாடியை சென்றடைவதற்கு முன், ரப்பர் பெல்ட்டுக்கும், சுவருக்கும் இடையில் உள்ள, சிறிய இடைவெளியில், சிறுவனின் தலை சிக்கியது.அப்போது கடையின் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, மின் இணைப்பை துண்டித்து நிறுத்தினர்.

மேலும், சிறுவனை, லாவகமாக காப்பாற்றினர்.எனினும், சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து ஏற்படுத்திய பீதியில் இருந்து, ரணிஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவர் உடல்நலம் தேறி வருகிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என, டாக்டர்கள்
தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், எஸ்கலேட்டரில் சிறுவனின் தலை சிக்கியது குறித்து, அங்குள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X