பொது செய்தி

இந்தியா

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Added : ஜன 08, 2020
Advertisement
 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுச்சேரி:மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் இறையன்பு, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, வின் யுவர் வீக்னஸ் நிறுவனர் ஜெகன், தன்னம்பிக்கை பேச்சாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் முதல்வர் மனோகரன், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி இயக்குநர் ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் மலர்கண், மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில், வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரி முதல்வர் நளினி ராஜகோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கட்டடவியல் துறை தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X