பொது செய்தி

இந்தியா

ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம்

புதுச்சேரி:இந்தியன் வங்கியில், ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம், வரும் மார்ச் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்கும் வகையில், ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம் என்ற சலுகை திட்டத்துடன் வங்கி அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்தில் அதிகாலையில் வாடிக்கையாளர்களை இல்லங்களில் சென்று சந்திக்கும் வராக்கடன் வசூல் முகாம் கடந்த 3ம் தேதி துவங்கியது. மண்டல பொதுமேலாளர் வீரராகவன் அறிவுறுத்தல்படி அரியாங்குப்பம் கிளை சார்பில் நடந்த முகாமை, துணை மண்டல மேலாளர் ராஜகோபால் துவக்கி வைத்தார். கிளை மேலாளர் சோமசுந்தரம் மற்றும் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டத்தில் கல்விக்கடன், தொழில் கடன், விவசாய கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் ஒரே தவனையில் செலுத்தினால் வட்டி சலுகை மட்டுமின்றி, அசலிலும் தள்ளுபடி சலுகை பெறலாம் என்றும், இத்திட்டம் வரும் மார்ச் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, வங்கி கிளை மேலாளர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
08-ஜன-202009:14:22 IST Report Abuse
Ramachandran Rajagopal மோசடி பேர்வழிகளுக்கெல்லாம் குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் கொடுத்து விட்டு வட்டி சலுகை அசலில் தள்ளுபடி என்றாலும் அவர்கள் கடன்களை திரும்ப செலுத்தமாட்டார்கள்.முழுவதுமாக தள்ளுப்படி ஆகிவிடுமா என எதிப்பார்ப்பார்கள்.இவர்களுக்கெல்லாம் மறு முதலீடு என்ற பெயரில் அரசு நிதி வங்கிகளுக்கு வழங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X