புதுச்சேரி:புதுச்சேரியில், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ -2020' மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, நாளை (9ம் தேதி) கோலாகலமாக துவங்குகிறது.
'தினமலர்' நாளிதழ், புதுமையான, 'ஷாப்பிங்' அனுபவத்தை மக்களுக்கு வழங்க, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.புதுச்சேரி மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', புதுச்சேரியில், நாளை (9ம் தேதி) துவங்கி 13ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.
குளு குளு அரங்கம்கடலுார் சாலையில், புதுச்சேரி கோர்ட் எதிரில், ஏ.எப்.டி., மைதானத்தில், முழுவதும், 'ஏசி' வசதி செய்யப்பட்ட, ஒரே கூரையின் கீழ், மூன்று பிரம்மாண்டமான அரங்குகளில், 200 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், ஆட்டோ மொபைல்ஸ், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கம்ப்யூட்டர், லேப்டாப், உதிரிபாகங்கள் மற்றும் குஜராத், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.குட்டீஸ் கார்னர்குட்டீஸ்களை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகள் எக்ஸ்போவில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை அதிகம் கவர்ந்த ஹெலிகாப்டர் ரைடு, கார் மற்றும் பைக் ரேஸ், பெண்டுலம், ஜம்பிங் பலுான், இரண்டு விதமான 'சிக்கு புக்கு' ரயில் பயணம், வாட்டர் போட்டிங் என, ஏராளமான விளையாட்டு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
மேலும், வெளி மாநில ஸ்டால்களில் விதவிதமான பேன்சி பொருட்கள, சேலை ரகங்கள், ஜூவல்லரிகள் என, வேறெங்கும் கண்டிராத மாடல்களில், சலுகை விலையில் விற்பனைக்கு குவிக்கப்படுகிறது.ஷாப்பிங் முடித்து களைப்புடன் திரும்புபவர்களுக்கு புட் கோர்ட்டும் உள்ளது. விதவிதமான உணவு வகைகளை ருசிக்கலாம்.
நுழைவுக் கட்டணம், 40 ரூபாய். காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை, ஷாப்பிங் செய்து மகிழலாம். கண்காட்சியில் கரண்டி முதல் கார் வரை ஒரே இடத்தில், அணிவகுக்க உள்ளதால், வீட்டு உபயோக பொருட்களை சலுகை விலையில், ஷாப்பிங் செய்து மகிழ ரெடியாயிடுங்க.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE