நிறைமாத கர்ப்பிணி தற்கொலை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

நெட்டப்பாக்கம்:நிறைமாத கர்ப்பிணி தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மடுகரை, ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அருண்ராஜ்,25; இவர் புதுச்சேரியில் மருந்து ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சிதம்பரம் அடுத்த அய்யனுார் அக்கரமங்கலத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ,23; என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான ஜெயஸ்ரீக்கு கடந்த 5ம் தேதி வளைகாப்பு நடந்தது. பின்னர் ஜெயஸ்ரீயை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதனையொட்டி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் ஜெயஸ்ரீ வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து ஜெயஸ்ரீயின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் மடுகரை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிந்து, ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வரதட்சணை கொடுமையா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், ஜெயஸ்ரீக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் தாசில்தார் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X