சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகம் பதவியேற்பு விழாவில் வாக்குவாதம்

Added : ஜன 08, 2020
Advertisement
 கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகம் பதவியேற்பு விழாவில்  வாக்குவாதம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா நடந்தது.ஆட்சேபனைகாலை, 10:00 மணிக்கு பதவியேற்பு விழா என, அரசு அறிவித்திருந்த வேளையில், நல்ல நேரம் பார்த்து, பகல் 12:00 மணிக்கு தான் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடந்தது.

விழாவிற்கு, ஒன்றிய அதிகாரிகள் ராம்குமார், லதா ஆகியோர் முன்னிலை வகிக்க, உதவி திட்ட அலுவலர் அம்பிகாபதி தலைமை வகித்தார்.பின், உதவி திட்ட அலுவலர் ஒன்றிய கவுன்சிலர்களிடம் முதலில் மூத்த உறுப்பினர் ஒருவர் பதவியேற்க வாருங்கள் என, அழைத்தார்.

அப்போது, அ.தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் என்பவர் பதவியேற்க சென்றார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர் ஆட்சேபனை தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் பதவியேற்பு விழாவிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அங்கிருந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

உறுதிமொழி

இதையடுத்து, கடம்பத்துார் போலீசார் வந்து பேச்சு நடத்தினர். இதையடுத்து, ஏற்பட்ட சமரசத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரும், மூத்த உறுப்பினருமான திராவிட பக்தன், ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொணடார்.இதையடுத்து மற்ற ஒன்றிய கவுன்சிலர்களும் பதவியேற்றனர்.கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, அரசு அதிகாரிகள் உறுதி மொழி வாசிக்க, அதை ஒன்றிய கவுன்சிலர் சொல்லி, பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

ஆனால், கடம்பத்துார், 10வது வார்டு ஒன்றிய பெண் கவுன்சிலர் தரணி என்பவருக்கு, அவரது ஆதரவாளர் ஒருவர் உறுதி மொழி வாசிக்க, அதை அந்த பெண் ஒன்றிய கவுன்சிலர் திரும்ப சொல்லி, பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.

கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், ஒன்றிய கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் படை சூழ ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடந்தது. பின், உதவி திட்ட அலுவலர் பேசுகையில், 'வரும் 11ம் தேதி ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X