புதுச்சேரி:சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்கும் மருத்துவ ஆலோசனை முகாம், புதுச்சேரியில் 11ம் தேதியும், கடலுாரில் 12ம் தேதி நடக்கிறது.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல், நீரிழிவு மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு சிறப்பு நிபுணர்களின் ஆலோசனை முகாம், புதுச்சேரியில் வரும் 11ம் தேதி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம், எண்: 30/11, அம்பாள் நகர் மெயின்ரோடு, புனித பேட்ரிக் பள்ளி அருகில் அமைந்துள்ள 'தி பாஷ்' மருத்துவமனையில், மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை நடக்கிறது.இருதய சிகிச்சை நிபுணர் கோபால் முருகேசன், நீரிழிவு நிபுணர் விஜய் பிரசாத் ஆலோசனை வழங்குகின்றனர். ஆலோசனை கட்டணம் ரூ. 200. முன்பதிவுக்கு 98412 68500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.கடலுார்கடலுாரில் வரும் 12ம்தேதி, ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம், கடலுார் என்ற முகவரியில், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்ய 9841268500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர், முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் கொண்டு வர வேண்டும்.
முகாமில் நெஞ்சில் வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல், களைப்பு, கை, தாடை, கழுத்தில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம், ஒழுங்கற்ற இருதய துடிப்பு, கால்களில் வீக்கம், இனம் புரியாத உணர்வு இழப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.இதேபோல் நீரிழிவு பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகள், கருவுறாமை, எலும்புப்புரை, வளர்ச்சி கோளாறுகள், பாலிசிஸ்ட்டிக் கருப்பை நோய் (பி.சி.ஓ.டி.,) மற்றும் மாதவிடாய் கோளாறுகள் தொடர்பாகவும், முகாமில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE