அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்

Added : ஜன 08, 2020
Share
 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்

திருத்தணி:அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டன. திருத்தணி கல்வி மாவட்டத்தில்,6 ம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ- - மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டன.

அந்த வகையில், திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 450 மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.இந் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை, ட. தெமினா கிரேனாப் தலைமை வகித்து, பாட புத்தகங்களை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X