இ சக்தி திட்ட செயல்பாடு குறித்த விளக்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'இ சக்தி' திட்ட செயல்பாடு குறித்த விளக்க கூட்டம்

Added : ஜன 08, 2020
Share
 'இ சக்தி' திட்ட செயல்பாடு குறித்த விளக்க கூட்டம்

புதுச்சேரி:சுய உதவிக்குழுக்களின் வங்கி செயல்பாடுகளை கணினிமயமாக்கும் ' இ சக்தி' திட்டம் குறித்து செயல்விளக்க கூட்டம் நடந்தது.
சுய உதவிக்குழுக்களுடைய வரவு செலவு கணக்குகளை கணினிமயமாக்கும் 'இ சக்தி'திட்டம் 256 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தை நபார்டு வங்கியுடன் புதுச்சேரி பாரதியார் வங்கிகள் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் இணைந்து செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, மாவட்ட அளவிலான செயல்விளக்க கூட்டம் புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. நபார்டு வங்கியின் ஊரக வளர்ச்சி மேலாளர் உமா குருமூர்த்தி வரவேற்று, இ சக்தி திட்டம் பற்றி செயல்பாடுகளை எடுத்துக் கூறினார்.
நபார்டு தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தொடக்க உரையாற்றினார். தொழில்நுட்ப பங்குதாரர் நாகராஜ், இ சக்தி இணை முகப்பு செயல்முறை விளக்கம் அளித்தார்.இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வீரராகவன், புதுச்சேரி சுய உதவிக்குழுக்கள் விவரங்களை எடுத்துரைத்தார். புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்கிரேட், புதுச்சேரி டி.ஆர்.டி.ஏ., லட்சுமணன், கிரிஜா ஆகியோர் திட்டத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி செலினா, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர், வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இந்தியன் வங்கி மற்றும் புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி சார்பில், சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி அளிக்கப்பட்டது.நபார்டு உதவி பொதுமேலாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X