அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 08, 2020
Share
 அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

திருத்தணி:திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையத்தில், சமத்துவ பொங்கல் விழா, கொண்டாடப்பட்டது.

திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக, பொங்கல் பானை, செங்கரும்புகள் வைத்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். பொங்கல் நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் துவக்கி வைத்தார்.பொங்கல் பொங்கி வந்த போது, 'பொங்கலோ பொங்கல்' என, குரல் எழுப்பியும், சிறப்பு பூஜை செய்தும் வழிபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X