பொது செய்தி

இந்தியா

சிங்கிரிகுடி கோவிலுக்கு ஜன. 12 ல் பாதயாத்திரை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

புதுச்சேரி:சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை வரும் 12ம் தேதி நடக்கிறது.
லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிப்பாட்டு மன்றதலைவர் இளங்கோ கூறியதாவது:புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிப்பாட்டு மன்றம், உலக நன்மைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத ஞாயிற்று கிழமை, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருமால் அடியார்களும், 30க்கும் மேற்பட்ட பஜனைக் குழுக்களும், ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்ளும், சிங்கிரி கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை 23 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.இந்தாண்டு 24வது ஆண்டு பாதயாத்திரை வரும் 12ம் தேதி காலை 6:00 மணிக்கு திருக்கோவிலுர் ஜீயர் சுவாமிகளின் மங்களாசானத்துடன் துவங்குகிறது. தென்திருப்பேர் உ.வே.அரவிந்தலோசநன் முன்னிலை வகிக்கிறார். தஞ்சாவூர் தேவநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாமசங்கீர்த்தனம், வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடம் சத்தியநாராயண ராமானுஜதாசன் குழுவினரின் பஜனை, வில்லியனுார் கீழ் அக்கராகாரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை, குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிஹர பஜனை கூடம் சார்பில் கிருஷ்ணர் சுவாமி ரதம், பாண்டுரங்க ரகுமாயி ஆன்மீக கைங்கரிய சபா சார்பில் ரதம் புறப்பாடு, கவிக்குயில் நகர் வேங்கடாத்திரி பஜனை கூடம், லாஸ்பேட்டை பாண்டவதுாதன் சங்கீர்த்தன சபா பஜனைக் குழுவினரோடு, வரதராஜ பெருமாள் கோவில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி கடலுார் சாலை வழியாக சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை சென்றடையும்.பாதயாத்திரை விழாவில் திவ்ய நாமபஜனையும், பிருந்தாவன பஜனை கள், லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X