பொது செய்தி

இந்தியா

மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைக்க வேண்டும்: ஒழுங்குமுறை ஆணைய கூட்டத்தில் காரசாரம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement
 மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைக்க வேண்டும்: ஒழுங்குமுறை ஆணைய கூட்டத்தில் காரசாரம்

புதுச்சேரி:புதுச்சேரியில் மின்கட்டணத்தை குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என, கருத்து கேட்பு கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.
புதுச்சேரி மின்துறை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் அறிக்கையின்படி கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, புதுச்சேரியில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. அந்தவகையில் 2020-2021ம் ஆண்டிற்கான வருவாய் தேவை மற்றும் மின்கட்டண நிர்ணயம் தொடர்பான அறிக்கையை புதுச்சேரி மின்துறை தாக்கல் செய்திருந்தது.அதன் அடிப்படையில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையர் கோயல் தலைமை தாங்கினார். உறுப்பினர் செயலர் ராகேஷ்குமார், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மா.கம்யூ., பெருமாள், இந்திய கம்யூ., கீதநாதன், பெற்றோர் மாணவர் அமைப்பு பாலா, நாராயணசாமி, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கண்காணிப்பு பொறியாளர் முரளி பேசும்போது, வரும் ஆண்டு இறுதி பற்றாக்குறையாக 187.76 கோடி இருக்கும், ஆனாலும் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கவில்லை, அதேசமயம் 4 சதவீத ஒழுங்குமுறை கூடுதல் கட்டணம் வரும் ஆண்டிலும் தொடரும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசுகையில் மின் இழப்பை குறைக்க வேண்டும், ஆணையம் அமைக்கப்பட்டது முதல் கட்டணம் குறைக்கப்படவில்லை, எனவே இந்த ஆண்டாவது கட்டணத்தை குறைக்க ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும், அரசிடம் உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதர வலியுறுத்த வேண்டும்,வருவாய் செலவு பட்டியலில் உள்ள சந்தேகம் போக்க வேண்டும், வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யப்பட்ட டெபாசிட் தொகையை மின் கட்டணத்தை குறைக்க பயன்படுத்துங்கள், அதிகாரிகள் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த வேண்டும், சுமார் ரூ.400 கோடி பாக்கி தொகையை வசூலிக்க வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X