சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 நாள் பெண் பணியாளரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

பொன்னேரி:ஊரக வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்காக, தெருச்சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, 100 நாள் பெண் பணியாளர் ஒருவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வன்னிப்பாக்கம், அனுப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளில், நேற்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதையொட்டி, நேற்று அதிகாலை முதல், கிராம தெருக்களை துாய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றுவது, குப்பை அள்ளுவது, 'பிளிச்சிங் பவுடர்' தெளிப்பது என, 100 நாள் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த இந்துமதி, 25, என்பவரை கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்தது.உடனடியாக அவரை, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீஞ்சூர் ஒன்றியத்தில் துாய்மை பணிகளில் ஈடுபடும் துப்புரவு மற்றும் 100 நாள் பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், செடிகளை அகற்றும் உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.பணியாளர்களின் பாதுகாப்பு கருதி தேவையான வசதிகளை செய்து தர, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X