இந்தியா

கவலை! நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள்...புதுச்சேரி அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா?

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
 கவலை!  நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள்...புதுச்சேரி அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா?

சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் நெல் ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுச்சேரில் உள்ள விளைநிலங்கள் மனைப் பிரிவுகளாக மாறிய நிலையில், ஒரு சில விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் சம்பா பருவத்தில் சுமார் 120 நாட்கள் முதல் 150 நாட்கள் வரையில் வளரக்கூடிய வெள்ளைப் பொன்னி, பொன்மணி, பிபிடி 5204 மற்றும் லேட் சம்பா பயிராக ஏடிடி 37, ஏடிடி 39 உள்ளிட்ட ரகங்கள் பயிரிட்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் அதாவது ஆடி 18ல் நாற்றங்கள் தயார் செய்து, நாற்று விட்டு வளர்ந்த பிறகு நடவு செய்து பராமரித்து வந்தனர். பருவ மழையும் போதிய அளவில் பெய்து நெல் சாகுபடிக்கு கைகொடுத்தது.
இந்நிலையில், வில்லியனுார், பாகூர், திருக்கனுார், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்லை தற்போது அறுவடை செய்ய துவங்கி உள்ளனர். போதுமான அளவில் அறுவடை இயந்திரங்கள் வராத காரணத்தினாலும், கடந்த சில தினங்களாக பெய்த மழையினாலும் அறுவடை பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு, இதே சம்பா பருவத்தில் பொன்னி ரூ.1750 முதல் ரூ.1850 வரையிலும், பொன்மணி ரூ.1200 முதல் ரூ.1100 வரையிலும், பிபிடி ரூ.1400 முதல் ரூ.1300 வரையில் விற்பனையானது.
தற்போது, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அங்கிருந்து நெல்லை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, புதுச்சேரிக்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளது. இதனால், பொன்னி ரூ.1480க்கும் குறைந்தபட்சம் ரூ.1400 வரையிலும், பொன்மணி நெல் ரகம் ரூ.1100க்கும் குறைந்தபட்சமாக ரூ. ஆயிரத்திற்கும், பிபிடி ரூ.1300க்கும் குறைந்தபட்சமாக ரூ.1250க்கும் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.புதுச்சேரியில் தற்போது குறைந்த அளவிலேயே நெல் அறுவடை நடந்து வருகிறது.
பொங்கலுக்கு பிறகே அதிக அளவில் நெல் அறுவடை செய்வது வழக்கம். இதனால் மேலும் விலை குறையும் என்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, விவசாய கூலி தொழிலாளர்களின் கூலி உயர்வு, உரம் உள்ளிட்ட பூச்சி மருந்துகளின் விலை உயர்வு மற்றும் நெல் அறுவடை மெஷின் வாடகை உயர்வு இப்படி விவசாயிகளின் செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல்லுக்கு போதுமான விலை ஏற்றம் இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.இந்த விஷயத்தில் புதுச்சேரி அரசு தலையிட்டு, நெல்லுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X