அடுக்கு மாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

Added : ஜன 08, 2020
Advertisement

புதுச்சேரி:அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இரண்டாவது மாடி வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி புது சாரம், பாலாஜி நகரில் உள்ள ராஜேந்திரி அப்பார்ட்மெண்ட், 2வது மாடியில் உள்ள ஜனார்த்தனன் (எ) ஜனார்த்தனதாஸ் என்பவரது வீட்டில் இருந்து நேற்று மாலை 6:30 மணிக்கு திடீரென புகை வெளியானது. அதனைக் கண்டு அப்பார்மென்ட் வாசிகள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வௌியேறினர்.புதுச்சேரி மற்றும் கோரிமேடு தீ அணைப்பு படையினர் விரைந்து சென்றனர்.
வீடு பூட்டியிருந்ததால், கதவை உடைக்க முயன்றனர். அதற்குள் வீட்டின் உரிமையாளர் அங்கு வந்ததால், சாவி மூலம் கதவு திறந்து, வீட்டின் உள்ளே இருந்த புகையை நவீன கருவி மூலம் வெளியேற்றி, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.இருப்பினும், வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, துணிகள், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.தீ வித்து குறித்து கோரிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X