பொது செய்தி

இந்தியா

சேதமடைந்த சிமென்ட் களம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை 

Added : ஜன 08, 2020
Advertisement

திருக்கனுார்:சோரப்பட்டு, வம்புப்பட்டு கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் களம் சேதமடைந்ததால், விவசாயிகள் தானியங்களை சாலையில் வைத்து பிரித்தெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, வம்புப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஏரிக்கரை பகுதியையொட்டி, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிரை உலர்த்தவும், பிரித்தெடுக்கவும் சோரப்பட்டு விவசாயிகள் வம்புப்பட்டு செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்ட சிமென்ட் களத்தையும், வம்புப்பட்டு விவசாயிகள் அரசு தொடக்கப் பள்ளி அருகேயுள்ள சிமென்ட் களத்தையும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த களங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த நெற்பயிரை வேறுவழியின்றி சாலையில் வைத்து உலரத்தி பிரித்தெடுக்கின்றனர்.இதனால், அச்சாலையில் பறக்கும் துாசிகளால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சோரப்பட்டு, வம்புப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் நலன்கருதி சேதமடைந்துள்ள உலர் களத்தை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X