பைக்குகள் திருடியவர் கைது

Added : ஜன 08, 2020
Advertisement
 பைக்குகள் திருடியவர் கைது

காரைக்கால்:காரைக்காலில், இரு பைக்குகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
திருப்பட்டினம், போலகத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் கடந்த 21ம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்திய பைக் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் திருப்பட்டினம் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீழவாஞ்சியூர் சோதனைச் சாவடி அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறினார். அதனையொட்டி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர் நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தை சேர்ந்த தங்கபிரகாசம் மகன் ஜான்,22; என்பதும், மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏற்றும் வேலை செய்து வந்தார்.
இவரும், இவரது நண்பருமான வேளாங்கண்ணியை சேர்ந்த சுரேஷ்,20; என்பவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 21ம் தேதி திருப்பட்டினத்தில் இரு பைக்குகள் திருடியதை ஒப்புக் கொண்டார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜானை கைது செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் பதுக்கி வைத்திருந்த இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X