சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement

மணவாள நகர்:

மணவாள நகர் அருகே, மூதாட்டியிடம், ௨ சவரன் தங்கத் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மணவாள நகர் அடுத்த, இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ராஜேஸ்வரி, 60. இவர், நேற்று முன்தினம், மாலை, 6:00 மணியளவில், மாந்தோப்பில், மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த, 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.அப்போது, மூதாட்டி சங்கிலியைப் பிடித்துக் கொள்ளவே, ௨ சவரன் தங்கச் சங்கிலியை மட்டும் பறித்துச் சென்றனர். இவர், கூச்சலிடவே மர்ம ஆசாமிகள், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.இது குறித்து, மணவாள நகர் போலீசில், ராஜேஸ்வரி அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X