புதுச்சேரி அரசை முடக்க வேண்டும்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

புதுச்சேரி:சட்டசபை தீர்மான முடிவை மீறும் கவர்னரின் செயலை தடுக்க வேண்டும் என, அன்பழகன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போதைய காங்., அரசும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, முதல்வரும், கவர்னரும் திட்டமிட்டு பல்வேறு குழப்பங்களையும், அதிகார மோதலையும் உருவாக்கி செயல்பட்டு வருவதை அ.தி.மு.க., கண்டிக்கிறது.ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம் செய்யாமல் இருந்த நிலையில் அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில் கவர்னர் கடந்த ஆண்டு ஜூலையில் ஆணையரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கவர்னருக்கு அதிகாரமில்லை என கூறி, முதல்வர் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டிகவனர் வெளியிட்ட ஆணையர் நியமன அறிவிப்பை ரத்து செய்து, பாலகிருஷ்ணனை ஆணையராக நியமனம் செய்தார்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது.அதற்கு முதல்வர், ஆணையர் நீதிபதிக்கு சமம், மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறினார்.இந்நிலையில், வரும் பிப்., 6ம் தேதிக்குள் புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தலை நடத்தும் ஆணையர் நியமன தேர்வு சம்பந்தமாக விளம்பரத்தை உள்ளாட்சி துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சட்டசபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் இருக்கின்றாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் சொல்வதை கேட்பது என்ற குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளனர். சட்டசபை தீர்மானத்தை கவர்னர் மீறுகிறார். இதை தடுக்க வேண்டும்.நிதி பெருக்கம், செயல்படாத அமைச்சரவை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை முதல்வர் கூட்ட வேண்டும். மத்திய அரசு, புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் தடையாக உள்ள புதுச்சேரி அரசை முடக்கம் செய்து, கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X