தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.ஒரு லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் பறிமுதல்

Added : ஜன 08, 2020
Share
Advertisement
 தமிழகத்திற்கு கடத்த முயன்ற  ரூ.ஒரு லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால்:காரைக்காலில் இருந்து கார் மூலம் தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, திருநள்ளார் ராம் காலனி அருகில் சந்தேகிக்கும் வகையில் சாலையோரத்தில் வெகுநேரமாக நின்றுக் கொண்டிருந்த காரை, சோதனை மேற்கொண்டனர்.அதில், 31 அட்டை பெட்டிகளில் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்து, காருடன் பறிமுதல் செய்து கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திருநள்ளாரில் இருந்து மதுபானங்களை தமிழக பகுதிக்கு கடத்திச் செல்ல வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X