சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூப்பர் மார்க்கெட்டில் நுாதன திருட்டு

Added : ஜன 08, 2020
Advertisement
 சூப்பர் மார்க்கெட்டில் நுாதன திருட்டு

திருத்தணி:தனியார் சூப்பர் மார்க்கெட்டில், பொருட்கள் வாங்குவது போல் நடித்து, நுாதன முறையில், மளிகைப் பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து, தேடி வருகின்றனர்.

திருத்தணி, மா.பொ.சி., சாலை, இந்தியன் வங்கி அருகில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில், காய்கறி, மளிகைப் பொருட்கள் உட்பட, வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.கடைக்கு பல நாட்களாக, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், லேப்-டாப் பையுடன் தினசரி வந்து, பொருட்கள் வாங்குவது போல் நடித்து, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பையில் போட்டு கொண்டு, இரண்டு பொருட்களுக்கு மட்டும், பில் போட்டு நுாதன முறையில் திருடி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அந்த மர்ம நபர் வழக்கம் போல், காலை, 9:00 மணிக்கு கடைக்கு பையுடன் வந்தார்.சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் பாலாஜி, மர்ம நபரை கண்காணிப்பு கேமராவின் மூலம் கண்காணித்தார்.அப்போது மர்ம நபர், விலை உயர்ந்த மளிகைப் பொருட்களை, தான் கொண்டு வந்த பையில் போட்டுக் கொண்டு, மிளகாய், இரண்டு சோப்புக்கு மட்டும், பில் போட்டுள்ளார்.

இதைக் கவனித்த உரிமையாளர், கடை மேலாளருக்கு மொபைல்போனில் தகவல் கொடுத்தார். மேலாளர் மர்ம நபரை தடுத்து நிறுத்தி, பையை வாங்கிய போது, மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.மர்ம நபர், பல நாட்களாக கடைக்கு வந்து, குறைந்தபட்சம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடியுள்ளதாக, கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, கடை உரிமையாளர் பாலாஜி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் அடையாளங்களை வைத்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X