பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பில் குறைபாடா? அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

Added : ஜன 08, 2020
Advertisement

திருவள்ளூர்:பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்குவதில், குறைபாடு இருந்தால், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில்,5 லட்சத்து, 65 ஆயிரத்து, 363 மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, தலா, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசி தொகுப்பு; ரொக்க தொகை, 1,000 ரூபாய், வரும், 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, நியாய நிலை கடை மூலம் வழங்கப்பட உள்ளது.

விடுபட்டவர்களுக்கு, 13ம் தேதி, முழுமையாக வழங்கி முடிக்கப்படும்.நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஒரு நாளைக்கு, 200 முதல், 250 குடும்ப அட்டைகளுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு, 8.30 மணி முதல், நண்பகல், 12.30 மணி; பிற்பகல் 1.30 மணி முதல், மாலை, 5.30 மணி வரை வழங்கப்படும்.

குடும்ப அட்டை நேரில் காண்பிக்க இயலாதவர்கள், குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், உரிய கடவு சொல் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.பொங்கல் பரிசு தொகுப்பில், புகார் இருந்தால், கீழ்கண்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தொடர்பு கொள்ளலாம், என, கலெக்டர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X