மாணவர் பெருமன்றத்தினர் மறியல் போராட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement

புதுச்சேரி:டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரியில் மாணவர் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை ராஜா தியேட்டர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எழிலன், அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் அந்தோணி தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ராமராஜன், முரளி, பெருமாள், சரவணன், உதயராஜ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X