பொது செய்தி

தமிழ்நாடு

ரத்ததான முகாம்

Added : ஜன 08, 2020
Advertisement
 ரத்ததான முகாம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் இளைஞர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் வட்டார அரசு மருத்துவமனை, டாக்டர் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் நடந்த முகாமிற்கு, மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தொற்றாநோய் மருத்துவ அலுவலர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். செயலர் பிரபாகரன் வரவேற்றார். விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன் முகாமினை துவக்கி வைத்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் இளைஞர்களிடமிருந்து 60 யூனிட் ரத்தம் பெற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் ரமணி, செவிலியர் ராகிணி, நற்பணி மன்ற கவுரவ தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் சரவணன், சூர்யா, தாண்டவமூர்த்தி, சேதுராமன், சரவணன், சிவதாசன், கன்னியப்பன், இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் நவநீத கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X