பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட சப் ஜூனியர் கபடி அணிக்கு பயிற்சி துவங்கியது

Added : ஜன 08, 2020
Advertisement
 மாவட்ட சப் ஜூனியர் கபடி அணிக்கு பயிற்சி துவங்கியது

சங்கராபுரம்:சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட சப் ஜூனியர் கபடி அணிக்கு 5 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது.
வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட கபடி வீரர்களுக்கு சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 5 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி தொடக்க விழாவிற்கு பள்ளி நிறுவனர் பெரியசாமி தலைமை தாங்கினார். பள்ளி சேர்மன் மணிவண்ணன், தாளாளர் தாகப்பிள்ளை, மாவட்ட கபடி கழக தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கபடி கழக செயலர் ராமச்சந்திரன், பயிற்சியாளர் மணிகண்டன், தேசிய நடுவர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் விமல், லோகநாதன், கொடி ராஜா மற்றும் பயிற்சியில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X