தமிழ்நாடு

மெத்தனம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள்: சாயல்குடி கண்மாய் ஆக்கிரமிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement
மெத்தனம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள்: சாயல்குடி கண்மாய் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம்:சாயல்குடி கண்மாய் நீர் பிடிப்பு, வரத்து கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால், கண்மாயில் நீர் தேக்குவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பருவ மழை அதிகளவில்பெய்தது. மாவட்டத்தில் நீர் நிலைகளில் நிறைந்த நிலையில் சாயல்குடி கண்மாய் பகுதியில் நீர் வந்து சேரவில்லை.88.15 ஹெக்டேரில் கண்மாய் முழுவதும் வறண்டுள்ளது. கண்மாய்க்குகமுதியில் இருந்து சங்கரத்தேவன் கால்வாய், நாராயண காவிரி கால்வாய்களில் இருந்து நீர் வரத்து இருக்க வேண்டும். இந்த வரத்து கால்வாய் மற்றும் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பால் சாயல்குடி கண்மாயில் நீர் தேக்க முடியாத நிலை உள்ளது.

கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து பல முறை புகார் மனுக்கள்அளித்தும் இன்று வரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுகின்றனர்.ஆக்கிரமிப்பாளர்களோ கான்கிரீட் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து மின் இணைப்புகள் உட்பட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலை நீடித்தால்சாயல்குடி கண்மாய் அடையாளம் தெரியாமல்அழிக்கப்படும் நிலை உள்ளது.

ஆதி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், கண்மாய், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து பல முறை புகார் மனுக்கள் அளித்துள்ளேன். இன்று வரை நடவடிக்கை எடுக்காமல்அதிகாரிகள் மழுப்பலான பதில் தெரிவிக்கின்றனர்.ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து அதிகாரிகள் செயல்படுன்றனர். சாயல்குடி கண்மாய் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X