பொது செய்தி

தமிழ்நாடு

நீண்ட நேரம் சாலையில் நிற்கும் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம்

Added : ஜன 08, 2020
Advertisement
 நீண்ட நேரம் சாலையில் நிற்கும் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களில் போக்குவரத்து போலீசார் நேரம் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகரில் காந்திரோடு, சேலம் சாலை, கச்சேரி சாலை ஆகிய மூன்றும் எப்போதும் போக்குவரத்து பிசியாக இருக்கும். பல்வேறு பணிகளுக்காக இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் பைக்குகளை சாலையில் தாறுமாறாக நிறுத்திச் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக அலுவல் நேரங்களில் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதை தவிர்க்க, கடந்த சில தினங்களுக்கு முன் எஸ்.பி., தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அதிக நேரம் நிற்கும் பைக்குகளை கண்டறிந்து அபராதம் விதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.இதையொட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் நேற்று, கச்சேரி சாலை, சேலம் மெயின் ரோடு, துருகம் சாலை ஆகிய மூன்று பகுதிகளிலும் சாலையோரம் நிற்கும் அனைத்து பைக்குகளின் சீட் கவரிலும் நேரம் குறிப்பிட்டு, அதன் பதிவெண்களை தனியாக எழுதினர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த பணி நடைபெறும் எனவும், வரும் 10ம் தேதியிலிருந்து அதிக நேரம் நிறுத்தப்படும் பைக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.மேலும், அடுத்த வாரத்தில் இருந்து இங்குள்ள கடைகளுக்கு பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காலை 8:00 மணி வரையிலும், மதியம் 1:00 முதல் 3:00 மணி வரையிலும், இரவு 9:00 மணிக்கு மேல் மட்டுமே வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X