பொது செய்தி

தமிழ்நாடு

வளவனுாரில் ஆக்கிரமிப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement

விழுப்புரம்:வளவனுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சண்முகத்திடம், மாஜி சேர்மன் முருகவேல் மனு கொடுத்தார்.
மனு விபரம்:விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வளவனுார் பேரூராட்சி சாலை இருவழி சாலையாக இருந்தாலும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மையப் பகுதியில் மக்கள் மற்றும் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெறப்பட்ட 12 கடைகள் மற்றும் பிள்ளையார் கோவில் ஒன்று, இதர புறம்போக்கில் உள்ள கடைகள் சேர்த்து மொத்தம் 20 கடைகள் உள்ளன.இந்த கடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இப்பகுதியில் தினமும் ஏற்படும் நெரிசலில் சிக்கி, வளவனுாரை வாகனங்கள் கடக்க 30 நிமிடத்திற்கும் மேலாகிறது. ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.தற்போது சாலையின் வலதுபுறம் உள்ள பட்டா பெறப்பட்ட மற்றும் கோவில் இடங்களில் உள்ள கடைகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். எனவே, வளவனுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குறுகிய சாலையை விரிவாக்கம் செய்ய அமைச்சர் மற்றும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X