சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி மூதாட்டி பலி

Added : ஜன 08, 2020
Advertisement

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே நடந்து சென்ற மூதாட்டி கார் மோதி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு, 60; இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் சுகுமார், 16; என்பவர் ஓட்டி வந்த கார், சரசு மீது மோதியது. இதில் காயமடைந்த சரசு சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X