பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு தொழுவமாக மாறிய அரசு அலுவலக கட்டடம்

Added : ஜன 08, 2020
Advertisement

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தில் அரசு கட்டடங்கள் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தில் அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. அங்கன்வாடி கட்டடம், மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடம், ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகிறது.தற்போது அந்த இடத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் மட்டும் இயங்கி வருகிறது. மற்ற இரு அலுவலக கட்டடங்கள் பூட்டக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலர் இங்கு மாடுகளை கட்டியும் குப்பைகளைக் கொட்டியும் வருகின்றனர்.
இதனால் அருகில் உள்ள அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இயங்காமல் உள்ள கட்டடங்களை செயல்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவந்து பொதுமக்களுக்கு பயன்பெற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X