பொது செய்தி

தமிழ்நாடு

கூவனுார் அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

Added : ஜன 08, 2020
Advertisement

திருக்கோவிலுார்:கூவனுார் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி எம்.எல்.ஏ.,விடம் அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதனை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வருகின்றனர். தரம் உயர்த்துவதற்கு மக்களின் பங்களிப்பு தொகையும் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக கூவனுார் மற்றும் சுற்றுவட்டார கிராம மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலர் பழனி தலைமையில், சாங்கியம் கூட்டுறவு சங்கத் தலைவர் பரசுராமன் மற்றும் கிராம மக்கள் சார்பில் ராமலிங்கம், முருகன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் குமரகுரு எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X