பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கத்தின் தரம் அறிதல் பயிற்சி

Added : ஜன 08, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் தங்கத்தின் தரம் அறிய பயிற்சி வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன் செய்திக்குறிப்பு:உடனடி வேலை வாய்ப்புக்கான தங்கத்தின் தரம் அறியும் பயிற்சி விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் வழங்கப்படுகிறது.இளைய தலைமுறைக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு, தங்க நகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முடித்த பின்னர் கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராகபணியாற்றலாம்.இந்த சான்றிதழை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியின் போது தங்கத்தை பற்றிய அடிப்படை பயிற்சி, பழைய நகையை தரம் பார்த்து கொள்முதல், உரைகல்லில் தரம் அறிதல், தங்கத்தில் இன்றைய நவீன தொழில் நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல் தொடர்பான பயிற்சியுடன், பயிற்சிக்கான உபகரணங்கள் நிலையத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்குமேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் 2 மாதங்கள் (100 மணி நேரம்) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி நடைபெறும். பயிற்சி கட்டணம் 4,543 ரூபாய்.பயிற்சி முடிந்து தேர்ச்சிக்குப் பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும் பயிற்சிக்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி வரும் 11ம் தேதி துவங்குகிறது.மேலும், விபரங்களுக்கு 04146 259467 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X