பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு; மாவட்டத்தில் நாளை வழங்கல்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

விழுப்புரம்:மாவட்டத்தில் நாளை 9ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கப்படுகிறது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:தமிழக அரசின் ஆணைப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இப்பணி வரும் 9ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை வழங்கப்படும். விடுபட்ட அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரும் 13ம் தேதி வழங்கப்பட்டு இப்பணி முழுமையாக முடிக்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் வழங்கப்படும்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கடைகளில் தெரு, பகுதி வாரியாக பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். தொலைந்து போன ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தில் ஸ்கேன் ஆகாத ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள், அக்குடும்ப அட்டையிலுள்ள நபர்களின் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒருமுறை கடவுச் சொல் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் தனி தாசில்தார் (பறக்கும் படை - 9445045608) மற்றும் சம்மந்தப்பட்ட தனி தாசில்தார் (குடிமைப் பொருள்), வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மேலும், இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க தனியாக கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146 - 223265 மற்றும் 04146 229884-க்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X