கூட்டுறவு வங்கியில் ஈவுத் தொகை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் ஈவுத் தொகை வழங்கல்

Added : ஜன 08, 2020
 கூட்டுறவு வங்கியில் ஈவுத் தொகை வழங்கல்

தியாகதுருகம்:பெரியமாம்பட்டு கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பங்குத் ஈவுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யப்பா தலைமை தாங்கினார். செயலர் குப்புசாமி, துணைத் தலைவர் சதாசிவம், இயக்குனர் விஜயா ராஜூ முன்னிலை வகித்தனர். உதவி செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.வங்கியில் பங்கு உறுப்பினர்களாக உள்ள 1,379 விவசாயிகளுக்கு 8 லட்சத்து 12 ஆயிரத்து 52 ரூபாய் பங்கு ஈவு தொகையாக வழங்கப்பட்டது.
இத்தொகையை சங்கத்தலைவர் அய்யப்பா விவசாயிகளிடம் வழங்கினார். காசாளர் விளக்கான், இயக்குனர்கள் கலைச்செல்வி ராஜவேல், லதா பிரபாகரன், காமராஜ், கண்ணன், பாலகிருஷ்ணன், சையத் குலாப்ஜான், வீரமுத்து, ராஜமாணிக்கம், விவசாயிகள் லோகநாதன், சத்தியமூர்த்தி, ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X