பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ சிகிச்சை முகாம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement
 மருத்துவ சிகிச்சை முகாம்

கண்டமங்கலம்:சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலகம் சார்பில் கண்டமங்கலத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமின் துவக்க விழாவிற்கு கண்டமங்கலம் முன்னாள் ஒன்றிய சேர்மன் ராமதாஸ் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தர்மன்,ஏழுமலை, தமிழ்மணி முன்னிலை வகித்தனர். நடமாடும் மருத்துவ செவிலியர் பிரீத்தி வரவேற்றார்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புருேஷாத்தமன் முகாமை துவக்கி வைத்தார். சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர் சீத்தாதேவி, சுகாதார ஆய்வாளர் முருகன், தன்னார்வலர் அஸ்மத், கொசுப்புழு பரிசோதகர்கள் இளையராஜா, கலியமூர்த்தி, சந்ரு, மோகன்முரளி, அங்கன்வாடி பணியாளர் புனிதம், அ.தி.மு.க., இளைஞர் பாசறை பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X