சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை திருட்டு

Added : ஜன 08, 2020

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார் பட்டினத்தை சேர்ந்த கோட்டைசாமி மனைவி கலைச்செல்வி 40.இவரது கணவர் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி சாவியை கதவின் அருகே உள்ள சமையல் அறையில் வைத்து விட்டு வயலுக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து, வீட்டில் இருந்த 3 பவுன் எடை கொண்ட மூன்று ஜோடி தங்க தோடுகள், இரண்டு ஜோடி கொலுசுகளை திருடிச் சென்றனர். வீடு திரும்பிய கலைச்செல்வி இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X