பொது செய்தி

தமிழ்நாடு

மன உறுதியிருந்தால் முன்னேறலாம்

Added : ஜன 08, 2020
Advertisement
 மன உறுதியிருந்தால் முன்னேறலாம்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன் வரவேற்றார். இ.எஸ்., கல்விக்குழுமம் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார்.'சுயதொழில் மற்றும் வங்கிக் கடன்' தலைப்பில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, தாட்கோ மூலம் வழங்கப்படும் அரசு சலுகைகள் குறித்து மாவட்ட தாட்கோ அலுவலக மேலாளர் முருகனும், ராணுவத்தில் வேலை வாய்ப்பு பற்றி முன்னாள் படைவீரர் நலன், உதவி இயக்குநர் அருள்மொழி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைத்து பேசியதாவது:இந்த காலத்தில் வேலை வாய்ப்பு என்பது அரிதான விஷயமாக உள்ளது. இதற்கு ஒரு வழிகாட்டியாக தான், இந்த கருத்தரங்கம் உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் எந்த வேலையை தேர்வு செய்ய வேண்டும், அதற்கான யுக்திகள் குறித்து இங்கு உங்களுக்கு விளக்கப்படுகிறது.நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.நீங்கள் பங்கேற்கும் நேர்முக தேர்வில், நேர்மையான முறையில் பதில் கூற வேண்டும். இங்கு, உடலமைப்பு என்பது முக்கியமல்ல. நேர்மையான எண்ணங்களும், நீங்கள் கூறும் உண்மையான பதில்களும் தான் முக்கியம். அதோடு, விடா முயற்சி இருக்க வேண்டும். எந்தவொரு தொழிலிலும் விடா முயற்சியோடு பணியாற்றி கொண்டிருக்க வேண்டும்.திடமான எண்ணங்கள் நம்மிடம் வேண்டும். எந்த பாடங்களில் தோல்வியடைந்தாலும், நீங்கள் மன உறுதியோடு விடாமல் படித்தால் முன்னேறிச் செல்லலாம். அது போன்றவர்கள் தான் இன்று, உயர்வான இடத்தில் இருக்கின்றனர். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பயிற்சி எடுக்க, எடுக்கதான் உங்களின் உறுதி வெளி உலகிற்கு தெரியும். இதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அதிகம் தேவைப்படுகிறது. கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் போது, அறிவியல், வரலாறு, புவியியல், கணக்கு பாடங்களை மட்டும் பயிலாமல் பொது அறிவு விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக, கலெக்டர் பட்டயப்படிப்பு முடித்து செல்லும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில், 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X