சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஓய்வு பெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement
 போக்குவரத்து ஓய்வு பெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று நடத்தக்கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு விழுப்புரம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பு தலைவர் பழமலை தலைமை தாங்கினார். மாநிலக்குழு கலியமூர்த்தி, பலராமன், சேைஷயன் முன்னிலை வகித்தனர்.மாநில துணைச் செயலர் சகாதேவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில துணைச் செயலாளர் இமயவரம்பன், துணை பொதுச் செயலர் சம்பந்தம், விழுப்புரம் கிளைச் செயலர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கி, அரசு கருவூலங்கள் மூலம் அரசு ஊழியர், மின்சார பிரிவு ஊழியர் போல் 1ம் தேதியே பென்ஷனை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கிளை பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X