கிரிக்கெட்; எந்த பள்ளிக்கு வெற்றி?| Dinamalar

கிரிக்கெட்; எந்த பள்ளிக்கு வெற்றி?

Added : ஜன 08, 2020

கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு, 'கோயம்புத்துார் யுனைட்டெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபி' வயது வரம்பற்றோர்களுக்கான கிரிக்கெட்போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. 12 பள்ளி அணிகள் பங்கேற்றன.நேற்று முன்தினம் பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த போட்டியில், பாரதி பள்ளி அணி, ஆனைமலை ஜி.பி., பள்ளி அணிகள் மோதின.முதலில் விளையாடிய பாரதி பள்ளி அணி, 25 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 93 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆனைமமலை ஜி.பி.,பள்ளி அணி, 18.5 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 96 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில், டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணி, டி.எம்.டி., பள்ளி அணிகள் மோதின. முதலில் விளையாடிய டி.ஏ.ராமலிங்கம் பள்ளி அணி, 25 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 285 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய டி.எம்.டி., பள்ளி அணி, 18.1 ஓவரில், 68 ரன் எடுத்து, 217 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X