சிலம்பம்; கம்பெடுத்து சுழற்றிய மாணவர்கள்

Added : ஜன 08, 2020
Advertisement

கோவை:கோவையில் நடந்த தென்மாநில சிலம்பம் போட்டியில், குனியமுத்துார் வீர கலை சிலம்பம் அணியினர், 862 புள்ளி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். 'பிரிக் பிட்னெஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்' மற்றும் 'ஓல்ட் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்' சார்பில், முதலாம் ஆண்டு தென்மாநில அளவிலான சிலம்பம் போட்டி, சரவணம்பட்டி பகுதியில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கான ஒற்றை கம்பு, இரண்டை கம்பு, சுருள் வாள் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 4 முதல் 40 வயது வரை போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.போட்டியின் முடிவில், குனியமுத்துார் வீர கலை சிலம்பம் அணியினர், 862 புள்ளி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X