பொது செய்தி

தமிழ்நாடு

வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

Added : ஜன 08, 2020
Advertisement
 வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

மயிலம்:மயிலம் ஒன்றியத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக பொது மக்களுக்கு கிடைக்கின்றதா என வட்ட வழங்கல் அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா 1000 ரூபாய் மற்றும் கரும்பு, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி போன்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் அபியுல்லா நேற்று மயிலம், கொல்லியங்குணம் கிராமத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என திடீர் ஆய்வு செய்தார்.அப்போது மயிலம் குறுவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கொல்லியங்குணம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், மயிலம் விநாயகம் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள், உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X